Monday, 4 January 2016

சிவகங்கை சின்ன புத்திக்காரர் சிதம்பரம்

சிவகங்கை சின்ன புத்திக்காரர் சிதம்பரம்

எல்லாரும் கழகங்களை காய்ச்சி கொண்டிருக்கும்போது , நான் ஒரு Change க்காக congress பக்கம் என் பார்வையை திரும்பி பார்க்கிறேன்.
இந்திய ஜனநாயக நாட்டில் எவ்வளவு மோசமான அரசியல்வாதியாக இருந்தாலும் தான் வென்ற தொகுதிக்கு ஒரு சில நல திட்டங்களயவது செய்வார்கள். உதாரணத்திற்கு நம் முன்னாள் இந்நாள் CM தொகுதிகளை பார்க்கலாம். ஆனால் தன்னை தொடர்ந்து வெற்றி பெற செய்த தொகுதிக்கும், மக்களுக்கும் ஒரு ஆணியும் புடுங்காத நன்றி கெட்ட ஜென்மம் இந்த SCPC. (கிட்டத்தட்ட 1984 - 2014 )
அவர் ஆட்சியிலும் கட்சியிலும் பதவியில் இருக்கும்போது அவருடைய பதவியை தவிர தன்னுடைய தொகுதி மக்களுக்காகவோ ,மாநிலதிற்காகவோ எதையும் நினைத்திருக்க மாட்டார் , பேசியிருக்க மாட்டார் .தேர்தலில் வெற்றி பெற்று Delhi சென்றவுடன் அவருக்கு soniya வைத் தவிர காரைக்குடி , சிவகங்கை , தமிழ்நாடு எல்லாம் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு தேர்தலுக்கு மட்டும் கண்டிப்பாகக ஞாபகம் வரும். கடைசியாக அவருக்கே தெரிந்து விட்டது இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்று. அதனால் தான் கடந்த parliment தேர்தலில் அவர் போட்டியிடவில்லை . ஆனால் அதிலும் ரெண்டு  லாபம் அவருக்கு . ஒன்று தான் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பியது , மற்றொன்று தன் மகனுக்கு எதிர்காலத்திற்கும் சேர்த்து சிவகங்கை தொகுதியை reserve செய்துவிட்டார். சரி மக்களுக்குத்தான் எதுவும் செய்யவில்ல வேற எதுவும் உருப்படியா செய்தாரென்றால் அதுவும் இல்லை.
வீரத்திற்கு பேர்போன சிவகங்கை சீமையில் பிறந்திருந்தும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்த போது தன்னுடைய சுயநலத்திற்க்காக அப்போதைய காங்கிரஸ் அரசில் No.2 மந்திரியாக இருந்தும் வாய்மூடி மௌனியாக இருந்தார். சரி அதுவும் இல்லை இவருக்கு கொஞ்சமாவது மனிதநேயமவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பிரபாகரன் தாயார் மருந்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமானத்திலேயே காக்கவைத்து திருப்பி அனுப்பி விட்டார். அதுமட்டுமில்லாமல் 50000 க்கும்  மேற்பட்ட ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளையடித்த PAASI நிறுவன தலைவர்களை கடத்திவைத்து  கொண்டு  பணம்  பறித்த IPS  அதிகாரி பிரமோத்குமார் ஐ தான் கற்ற கல்வி மற்றும் செலவாக்கை கொண்டும் வழக்கம்போல் இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கொண்டும் Supreme Court இல் வாதாடி விடுவித்தார். இதுதான் அவர் மக்களுக்கு ஆற்றிய மிகப்பெரிய சேவை. தான் கற்ற கல்வி, செல்வம் , அறிவு எல்லாத்தையும் கொண்டு தமிழ் வளர்ச்சிக்காகவும் , ஆன்மிக பணிக்கும் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற நற்காரியங்களை செய்த வள்ளல் அழகப்பா, அண்ணாமலை , இராமநாதன் , தியாகராஜன் செட்டியார் போன்ற நல்லோர்கள் வாழ்ந்த சமூகத்திலிருந்து வந்தும் இவருக்கு சின்ன புத்தி மட்டும்தான் இருக்கிறது . SCPC ஐ முச்சந்தியில் நிற்க வைத்து எதாவது செய்ய வேண்டும் . தனக்காகவோ தன் மகனுக்காகவோ மீண்டும் தொகுதி பக்கம் வரத்தான் வேண்டும் அப்போது பார்த்துக்கலாம்.
எங்க ஊர் பக்கம் இவர்தான் நமக்கு ஒரு நல்ல காரியமும் செய்யமாட்டார் ஏன் இவருக்கு Vote போடுறீங்க என்று கேட்டால் அவர் நம்ம area காரர் Delhi இல் பெரிய பதவியில் இருந்தால் நமக்கு பெருமை தானே என்பார்கள். அதற்க்கு பதிலாக காரைக்குடியில் இருந்து ஒரு Milestone (Karaikudi 2600 Km ) புடுங்கி Delhi இல் நட்டு வைத்து விடலாம் . 


No comments:

Post a Comment