தேர்தல் வந்தாலும் வந்துச்சு ஒரே கருத்தா சொல்லி எல்லாரையும் கடுப்பேத்தியாச்சு. பதிலுக்கு தினமும் அரசியல்வாதிகளும் , media க்களும் அவர்கள் பங்குக்கு இதுதான் chance ன்னு வச்சு செய்றாங்க. நண்பர் Poongundran சொல்கிறமாதிரி சீக்கிரம் machine ஐ கொண்டுவந்தாலாவது Vote ஐ பதிவு செய்திட்டு நிம்மதியா இருக்கலாம்போல.
சரி அரசியலே பேசிக்கிட்டு இருக்கிறதவிட வேறு topic பக்கம் கவனத்தை திசை திருப்பலாம்னு யோசித்தேன்.
இந்த மேடை பேச்சாளர்கள் , எழுத்தாளர்கள் எல்லாம் சங்க இலக்கியம் பற்றியே அதிகமாக அப்படி இப்படின்னு கதை விட்டுகொண்டிருப்பர்கள். சரி அதையும் கொஞ்சம் படிச்சு பார்ப்போம்னு இறங்கிட்டேன். சங்க இலங்கியங்களில் காதல் , வீரம் பற்றி அதிகமாக மிக சிறப்பான வர்ணிப்புடன் எழுதியிருப்பார்கள் என்று ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.
நமக்கு இப்போது வீரம்னா அது எந்த அரசியல்வாதியையாவது facebook இல் திட்டிகொண்டிருப்பது என்றாகிவிட்டது. ஆனால் காதல் மனதில் எப்போதும் இனிமையான நினைவாக, சுகமாக இருக்கிறது. அதனால் சங்க இலக்கியத்தில் இருந்து நான் படித்த அழகான வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
By uttering this poem the Panki says that they were very attentive to the extent they could hear flowers falling but they couldn’t hear any signal from Thalaivan. So if some is to be blamed for Thalaivan and Thalaivi not meeting previous day it must be the Thalaivan for not giving proper signal. She says this to make it clear that Thalaivi did not avoid Thalaivan , rather she was waiting to meet Thalaivan the previous night. Ezhil here is the mountain in Kingdom of King Nannan. Now it would be interesting to learn about the Nocchi tree.
, n. 1. Five-leaved chaste tree. See வெண்ணொச்சி. நொச்சி மாமலர் நிறத்தன (சீவக. 2163). 2. Three-leaved chaste tree. See கருநொச்சி. 3. (Puṟap.) See நொச்சித்திணை. நொச்சிப்படலம். (பு. வெ. 5.) 4. (Puṟap.) A minor theme eulogising the nocci
But we should also look at this word மயிலடி¹ mayil-aṭti 3. Tall chaste-tree. See காட்டுநொச்சி, காட்டுநொச்சி kāṭṭttu-nocci , n. < id. +. (L.) 1. Tall chaste tree, l. tr., Vitex altissima; நொச்சி மரவகை. We see so many different varieties of Nocchi. But there is clue in poem “leaves like peacock feet” so with this clue I search for the tree.
To understand the leaves we first need to know how a peacock feet would look like.
Peacock FeetPeacock Foot
So it looks like the plant is going to have three leaves together like the peacock feet.
Lets see the leaves of this kaatu nochi
Mayiladi nocchi _ kaatu nochi
So lets have closer look at peacock feet once again.
Peacock foot
Peacock foot has 4 fingers and one at the back.
See the foot print of a peacock below.
peacock footprint
Lets check out the leaves once again now in comparison with peacock foot print.
Now you would understand why the leaves look like the peacock feet. Now Lets see the flower
The poet compares the blue shades of the flower and the Sapphire stone as well as says the tree’s leaves are like peacock’s feet. The Sangam poets have always described nature as integral part of love poems to add to the emotions of the poem.
We also come to know that Noocchi flowers fall in the night! Now you would understand that learning Sangam poem also gives you a big lesson in Botany!
peacock chaste tree_ mayiladi nocchi
After seeing this tree you should understand the underlying sarcasm of Panki. She mocks at the Thalaivan saying we could hear even leaves from the tree falling but not your signal!—————————————————————————————————
Other Available translations: What Her Friend Said:
Even though the whole large town sleeps, we do not sleep, hearing distinctly the sound of blue flowers shaken off the beautiful , soft branches of the nocci tree,with leaves like peacock’s feet, and dark flower bunches on Ezhil hill, near my home. Translated by Shanmugam Pillai and David Ludden
The great city fall asleep but we did not sleep. Clearly we heard,all night, from the hillock next out house the tender branches of the flower-clustered tree with leaves like peacock-feet let fall their blue-sapphire flowers. Translated by A.K.Ramanujan
Friday, 5 February 2016
பெரியகோட்டை ஸ்பெஷல்
நான் 2010 இல் blogspot ஆரம்பித்தேன். அப்போது பெரியகோட்டை திருவிழாவை பற்றி எழுதினேன் .
அதில இப்ப கொஞ்சம் tinkering, putty பார்த்து போன வருஷ திருவிழாவில் எடுத்த photos இணைத்திருக்கிறேன்.
நண்பர் அறந்தை அண்ணாதுரை படித்துவிட்டு over built up என்று கருத்து தெரிவித்தார் . நண்பர் தேவேந்திரன் படித்துவிட்டு மச்சி கலக்கு என்று சொன்னார் . அவர்கள் இருவருக்கும் நன்றி.
ஏனென்றால் 2009 இல் blogspot பற்றி அறிமுகபடுத்தி வைத்தவர் அண்ணாதுரை தான் . என்னுடைய post க்கு first comment பதிவு செய்தது தேவேந்திரன் தான்.
சரி நம்ம ஊரு திருவிழா விற்கு போகலாம் வாங்க.
பெரியகோட்டையில் நடுக்கும் திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. நான் மற்றும் என்னை போல் வெளியூரில் இருக்கும் எல்லாரும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவோம்.
தாமணி செல்லையனார் கோயில் என்று ஒன்று இருக்கிறது . இதுவும் ஐயனார் கோவில்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஐயனார் கோயில் மாதிரி இல்லை. அங்கு எல்லாம் அய்யனாரை ஊருக்கு எல்லையில் காவல் தெய்வமாக பெரிய சிலை மட்டும் செய்து வைத்து இருப்பார்கள்.
ஆனால் நமது பெரியகொட்டையில் சிறந்த பாரம்பரிய கோயில் கட்டி கொண்டாடுகிறார்கள். பெரியகோட்டை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பனிரெண்டு ஐயனார் கோயில்கள் உள்ளன. அவைகள் காவல் தெய்வங்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு ஐயனாரும் ஒவ்வொரு குறிப்பிட்ட மக்களுக்கு குல தெய்வம் ஆகும். அணைத்து ஐயனார் கோயிலுக்கும் தாய்வீடு மாதிரி தாமணி செல்லையனார் கோயில் . இந்த ஐயனார்களுக்கு பாரம்பரிய கோயில் மட்டும் இல்லை அணைத்து ஐயனார்களுக்கும் தனிதனி ஐம்பொன் சிலைகளும் உண்டு. எல்லா ஐயனர்களுக்கும் முப்பத்தி இரண்டு கிராமங்களும் சேர்ந்து நடத்தும் திருவிழாதான் பெரியகோட்டை திருவிழா . இதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு அய்யனாருக்கும் அந்தந்த ஊர்களில் தனிதனி திருவிழா வேறு நடக்கும். காப்பு கட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும் . முதல் எட்டு நாட்கள் சாமி அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்சிகள் தாமணி செல்லையனார் கோயிலில் நடக்கும். எட்டாம் நாள் இரவு அணைத்து ஐயனார் கேடயங்களையும் வரிசையாக வைத்து அலங்கரித்து மின்னொளியில் மின்ன விடுவார்கள்.
அதை காண கண்கள் கோடி வேண்டும். தேவலோகத்தில் இந்திரா விழா கூட இப்படி நடக்கும் என்பது சந்தேகம்தான். அன்று இரவு திரைப்படம் அல்லது பாட்டு கச்சேரி அல்லது கரகாட்டம் அதாவது ஒரு நிகழ்ச்சி வைப்பார்கள். எல்லா சாமிகளும் அலங்காரம் முடித்த பின்பு விடியக்காலை சாமிகளை தூக்கி கொண்டு இளங்கோயில் என்ற கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.
அங்கு வைத்து இரண்டு நாள் திருவிழா நடக்கும். தாமணி செல்லையனார் கோயிலில் இருந்து வரும் வழியில் சில சம்பிரதாய நிகழ்சிகள் நடக்கும் . அதை பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை . தெரிந்தவுடன் அதை பற்றி விரிவாக எழுதுகிறேன். ஆனால் ஊர்வலம் வரும்போது பார்க்க வேண்டுமே வானவீதியில் அணைத்து கடவுள்களும் அணிவகுத்து வந்தால் கூட இதற்கு இணை ஆகுமா என்று தெரியவில்லை.
மண்டுகுண்டு என்ற ஊரணி கரையில் வான/ வெடி வேடிக்கை நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக இருக்கும். ஒரு செய்தி ஊடகம் கூட பெரியகோட்டை பகுதிக்கு வருவதில்லை அதனால் இதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் மண்டுகுண்டு ஊரணி கார்த்திகை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதை பார்க்கும்போது இரவில் மிக அழகாக இருக்கும். பிறகு வின்னி மரம் என்ற இடத்தில ஆடு பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும் . அதன் பிறகு அதிகாலையில் அணைத்து சாமிகளையும் இளங்கோயிலில் வரிசையில் வைத்து விடுவார்கள்.
ஒன்பதாம் நாள் இரவு மிக பிரமாண்டமாக மின்னொளி கலை அரங்கில் புராண நாடகம் நடை பெரும். அதை காண பெரும்பாலான மக்கள் வந்து இருப்பார்கள் . விடிய விடிய இருந்து நாடகத்தை ரசித்துவிட்டு செல்வார்கள். வள்ளி திருமணம், அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் நடத்தப்படும், நாடகத்தின் ஆரம்பமே அமர்களமாக இருக்கும். பபூன் மற்றும் டான்ஸ் காமிக் இருவரும் சேர்ந்து நிறைய ஜோக் அடிப்பார்கள் . அதன் பிறகு நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் வந்து அவர் அவர் திறமையை வசங்களாலும் பாடல்களாலும் காட்டுவார்கள்.
பத்தாம் நாள் காலையில் இருந்து பக்தர்கள் அனைவரும் அவர்களுடைய நேர்த்தி கடன்களை செய்வார்கள். சாமிகளுக்கு அர்ச்சனை செய்வார்கள். எல்லோர் வீட்டிலும் அன்று செட்டினாட்டிற்கு உண்டான சுவை மற்றும் காரம் மிகுந்த விருந்து இருக்கும் . மதிய விருந்து முடிந்த பிறகு அனைவரும் கோயிலில் ஆஜர் ஆகிவிடுவோம். ஒன்பது நாட்கள் திருவிழாவிற்கு வராதவர்கள் கூட இன்று வந்துவிடுவார்கள் . கோயில் வளாகம் முழுதும் அணைத்து விதமான் கடைகள் முளைத்து இருக்கும். அனைவரும் அவரவர்க்கு தேவையான பொருள்களை வாங்கி செல்வார்கள். ஒரு பக்கம் சிலம்பாட்டம், திராம்செட் ஆட்டம், இளைஞர்களின் டான்ஸ் என்று பார்த்தாலும் திருவிழா ஓஹோ என்று கலை கட்டும். இதில் ஒரு முக்கியமான விஷத்தை இதுவரை சொல்லாமல் விட்டுவிட்டேன். அது என்னவென்றால் காதல். இந்த திருவிழாவிற்கு இளைஞர்களிடம் வரவேற்ப்பு இருப்பதே காதளினான்ல்தான். எட்டாம் நாள் இரவில் இருந்து தங்களின் காதலன் காதலியை பார்த்து பார்த்தே கழுத்து திரும்பி விடும். ஒருவர்க்கு ஒருவர் பரிசு வாங்கி கொடுப்பார்கள். இதற்காகவே அழகாக டிரஸ் அணிந்து கொண்டு வந்திருப்பார்கள். இந்த காதல் கதை தனி டிராக் . மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கும்போது ஒருபக்கம் யாருக்காவது இரண்டு மூன்று குரூப்களுக்கு இடையே சண்டை வந்து விடும். இந்த பகுதியில் இன்னொரு விரும்பத்தகாத கலாசாரம் உள்ளது. அதாவது இதுமாதிரி திருவிழா, கல்யாணம் மற்றும் சாவு வீடுகளில் திடீரென்று சண்டை அடித்து கொள்வார்கள். இது ரொம்ப நாளாக நடக்கிறது. யாரும் திருந்தினபாடில்லை. கடைசியில் வடிவேலு சொல்ற மாதிரி ஸ்டார்டிங் நல்லாத்தான் இருந்துச்சு பினிஷிங் தான் சரியில்லை மாதிரி முடிஞ்சிடும்.
இது ஒருபுறம் நடக்க அணைத்து அய்யனார்களையும் மறுபடியும் தாய் வீட்டிற்கு கொண்டு போக ஏற்ப்பாடுகளை செய்வார்கள். அப்பறம் எல்லாம் முடிந்த பிறகு சாமி தாய் வீட்டிற்கு போய்விடும். அனைவருக்கும் திருவிழா இவ்வளவு சீக்கிரம் முடிந்து போச்சே என்று வருத்தமாக இருக்கும். மீண்டும் அடுத்த திருவிழா வரும் வரை ஆவலுடன் காத்துக்கொண்டிருப்போம்.
திருவிழா ஏன் நம் முன்னோர்கள் நடத்தினார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இங்கு வந்து பார்த்தல் தெரியும். நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள உறவை புதுப்பிக்கவே என்று தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு வறுமையாக இருந்தாலும் திருவிழா என்றால் ஊரில் குதூகலந்தான்.
எல்லாரும் கழகங்களை காய்ச்சி கொண்டிருக்கும்போது , நான் ஒரு Change க்காக congress பக்கம் என் பார்வையை திரும்பி பார்க்கிறேன். இந்திய ஜனநாயக நாட்டில் எவ்வளவு மோசமான அரசியல்வாதியாக இருந்தாலும் தான் வென்ற தொகுதிக்கு ஒரு சில நல திட்டங்களயவது செய்வார்கள். உதாரணத்திற்கு நம் முன்னாள் இந்நாள் CM தொகுதிகளை பார்க்கலாம். ஆனால் தன்னை தொடர்ந்து வெற்றி பெற செய்த தொகுதிக்கும், மக்களுக்கும் ஒரு ஆணியும் புடுங்காத நன்றி கெட்ட ஜென்மம் இந்த SCPC. (கிட்டத்தட்ட 1984 - 2014 ) அவர் ஆட்சியிலும் கட்சியிலும் பதவியில் இருக்கும்போது அவருடைய பதவியை தவிர தன்னுடைய தொகுதி மக்களுக்காகவோ ,மாநிலதிற்காகவோ எதையும் நினைத்திருக்க மாட்டார் , பேசியிருக்க மாட்டார் .தேர்தலில் வெற்றி பெற்று Delhi சென்றவுடன் அவருக்கு soniya வைத் தவிர காரைக்குடி , சிவகங்கை , தமிழ்நாடு எல்லாம் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு தேர்தலுக்கு மட்டும் கண்டிப்பாகக ஞாபகம் வரும். கடைசியாக அவருக்கே தெரிந்து விட்டது இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்று. அதனால் தான் கடந்த parliment தேர்தலில் அவர் போட்டியிடவில்லை . ஆனால் அதிலும் ரெண்டு லாபம் அவருக்கு . ஒன்று தான் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பியது , மற்றொன்று தன் மகனுக்கு எதிர்காலத்திற்கும் சேர்த்து சிவகங்கை தொகுதியை reserve செய்துவிட்டார். சரி மக்களுக்குத்தான் எதுவும் செய்யவில்ல வேற எதுவும் உருப்படியா செய்தாரென்றால் அதுவும் இல்லை. வீரத்திற்கு பேர்போன சிவகங்கை சீமையில் பிறந்திருந்தும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்த போது தன்னுடைய சுயநலத்திற்க்காக அப்போதைய காங்கிரஸ் அரசில் No.2 மந்திரியாக இருந்தும் வாய்மூடி மௌனியாக இருந்தார். சரி அதுவும் இல்லை இவருக்கு கொஞ்சமாவது மனிதநேயமவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பிரபாகரன் தாயார் மருந்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமானத்திலேயே காக்கவைத்து திருப்பி அனுப்பி விட்டார். அதுமட்டுமில்லாமல் 50000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளையடித்த PAASI நிறுவன தலைவர்களை கடத்திவைத்து கொண்டு பணம் பறித்த IPS அதிகாரி பிரமோத்குமார் ஐ தான் கற்ற கல்வி மற்றும் செலவாக்கை கொண்டும் வழக்கம்போல் இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கொண்டும் Supreme Court இல் வாதாடி விடுவித்தார். இதுதான் அவர் மக்களுக்கு ஆற்றிய மிகப்பெரிய சேவை. தான் கற்ற கல்வி, செல்வம் , அறிவு எல்லாத்தையும் கொண்டு தமிழ் வளர்ச்சிக்காகவும் , ஆன்மிக பணிக்கும் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்காகவும் எண்ணற்ற நற்காரியங்களை செய்த வள்ளல் அழகப்பா, அண்ணாமலை , இராமநாதன் , தியாகராஜன் செட்டியார் போன்ற நல்லோர்கள் வாழ்ந்த சமூகத்திலிருந்து வந்தும் இவருக்கு சின்ன புத்தி மட்டும்தான் இருக்கிறது . SCPC ஐ முச்சந்தியில் நிற்க வைத்து எதாவது செய்ய வேண்டும் . தனக்காகவோ தன் மகனுக்காகவோ மீண்டும் தொகுதி பக்கம் வரத்தான் வேண்டும் அப்போது பார்த்துக்கலாம்.
எங்க ஊர் பக்கம் இவர்தான் நமக்கு ஒரு நல்ல காரியமும் செய்யமாட்டார் ஏன் இவருக்கு Vote போடுறீங்க என்று கேட்டால் அவர் நம்ம area காரர் Delhi இல் பெரிய பதவியில் இருந்தால் நமக்கு பெருமை தானே என்பார்கள். அதற்க்கு பதிலாக காரைக்குடியில் இருந்து ஒரு Milestone (Karaikudi 2600 Km ) புடுங்கி Delhi இல் நட்டு வைத்து விடலாம் .